Enable Javscript for better performance
"மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே குறிக்கோள் அல்ல'- Dinamani

சுடச்சுட

    

    மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கக் கூடாது என்று பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.
     கோவை, பாரதிய வித்யா பவன் நுண்கலைத் துறையின் ஆண்டு விழா ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பவன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:
     உலகத்தில் உள்ள பிற கலாசாரங்களுக்கும், இந்தியக் கலாசாரத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியக் கலாசாரம் ஆன்மிகம் என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. அதனால்தான் கல்வி, கலை என அனைத்திலும் ஆன்மிகத்தின் தாக்கம் உள்ளது.
     இதுபோல, நம்நாட்டின் விழுமியங்களை கல்வி, கலைகளின் மூலமாக உலகத்துக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே பாரதிய வித்யா பவன் தொடங்கப்பட்டது.
    இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்காமல், பண்பாட்டிலும் சிறந்தவர்களாகத் திகழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றார்.
     முன்னதாக மாணவிகள் தேவிகா மஹேந்திரன், ஆர்.மேகா பாரதி, வி.செளம்யா ஆகியோரின் வாய்ப்பாட்டு, எஸ்.பரத்வாஜ், ஆர்.சர்பேஸ்வரன், எஸ்.ஸ்ரீஜித் ஆகியோரின் மிருதங்க இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai