Enable Javscript for better performance
மயங்கி விழுந்த குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்து ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
     கோவை, கரும்புக்கடை, ஆசாத் நகரைச் சேர்ந்தவர் ஹாரூன். இவரது மனைவி சபிநிஷா. இவர்களது ஒன்றரை வயதுக் குழந்தை இஷா சாஜியா. இந்நிலையில், சபிநிஷா குழந்தையை குளிக்க வைத்துவிட்டு துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.
     அருகில், பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, வலிப்பு ஏற்பட்டு குழந்தை மயங்கி விழுந்துள்ளது.
     அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
     அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து, குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai