Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் வளர் பயிற்சி சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் வளர் பயிற்சி சான்றிதழ்

    By DIN  |   Published on : 15th October 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழக சிறப்புக் கல்வியியல் புலத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோவையில் உள்ள செஷயர் ஹோம்ஸ் தொண்டு நிறுவனமானது மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்தல், சுயதொழில் பயிற்சி, பயன்பாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    இந்நிறுவனம் தமிழகத்தில் முதல்முறையாக விவேகானந்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்தியேகமான வேலை வாய்ப்புக்கு முந்தைய பொதுத் திறன் மேம்பாட்டு சிறப்புப் பயிற்சியை நடத்தியது. 45 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் 18 முதல் 35 வயதுக்கு உள்பட்ட 12-ஆம் வகுப்பு படித்துள்ள, இயக்கம் மற்றும் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
    அதைத் தொடர்ந்து 15 நாள்கள் பிற நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதையடுத்து இப்பயிற்சி முடித்த 30 பேருக்குச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சிறப்புக் கல்வியியல் புலத்தின் முதன்மையர் என்.முத்தையா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சுதா பயிற்சியறிக்கை சமர்ப்பித்தார். வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி அபிராமானந்தா தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். சங்கர் சுப்பையா நன்றி கூறினார்.இதில், செஷயர் ஹோம்ஸ் தலைவர் ரவிசெல்வன், செயலர் ஜி.தனலட்சுமி, பொருளாளர் ரவிச்சந்திரன் தாமோதரன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜி.ஆர்.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai