Enable Javscript for better performance
மேயர் அறையில் மராமத்துப் பணி: ஊழியர்களிடம் மேயர் கோபம்- Dinamani

சுடச்சுட

    

    மேயர் அறையில் மராமத்துப் பணி: ஊழியர்களிடம் மேயர் கோபம்

    By DIN  |   Published on : 15th October 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகவல் தெரிவிக்காமல் தனது அறையில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டதால் மாநகராட்சி ஊழியர்களிடம் மேயர் ப.ராஜ்குமார் கோபம் கொண்டார்.
      தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து, கோவை மேயர் ப.ராஜ்குமார் அவரது காரை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இருப்பினும், அவரது பதவிக் காலம் அக்டோபர் 24-ஆம் தேதி வரை உள்ளது.
     இந்நிலையில் மாநகராட்சி புதிய மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்குள் மேயர் அறையில் மராமத்துப் பணிகளை செய்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சில தினங்களுக்கு முன்னர் பணிகளைத் தொடங்கியது.  தற்போது, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
     இந்நிலையில், மேயர் ப.ராஜ்குமார் தனது வழக்கமான அலுவல் மற்றும் விருந்தினர்களைச் சந்திப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார். அப்போது, தனக்கு தகவல் தெரிவிக்காமல் தனது அறையில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வது குறித்தும், தனது அறையை வேறு இடத்துக்கு மாற்றியது தொடர்பாகவும் மாநகராட்சி ஊழியர்களிடம் கோபம் கொண்டுள்ளார்.
     இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:
     தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மேயர் அறையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போதுதான் புதிய மேயர் பதவி ஏற்பதற்குள் அறையில் பணிகளை நிறைவு செய்யமுடியும்.
     ஆனால், எதிர்பாராதவிதமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து மேயருக்கு பொலிவுறு திட்டத்துக்காக அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தில் அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai