Enable Javscript for better performance
வேளாண் பல்கலை. மாணவிகளுக்கு சட்டப் பேரவை துணைத் தலைவர் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் பல்கலை. மாணவிகளுக்கு சட்டப் பேரவை துணைத் தலைவர் பாராட்டு

    By DIN  |   Published on : 15th October 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளித்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகளை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வெள்ளிக்கிழமை பாராட்டினார்.
    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 9 பேர் பொள்ளாச்சியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தங்கி, தாங்கள் படித்த தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்து வருகின்றனர்.
    மேலும், விவசாயிகளிடம் இருந்து அவர்கள் அனுபவப் பயிற்சியும் பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி, விநாயகா தென்னை உற்பத்தியாளர் சங்கத்துடன் இணைந்து அவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நோய் தாக்கிய தென்னை மரங்களைப் பாதுகாப்பது, நுண்ணுயிர் உரம் தயாரித்தல், கூண்வண்டுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிக்கு எடுத்துரைத்தனர்.
    மாணவிகள் இச்செயல்பாட்டை அறிந்த சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் 9 மாணவிகளையும் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai