கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.
கேரள மாநிலத்தில் கடந்த மே 30-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநில எல்லைப் பகுதியான கோவையிலும் கடந்த ஒரிரு தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.
காந்திபுரம், சாய்பாபா காலனி, ரேஸ்கோர்ஸ், கணபதி, பீளமேடு, ராமநாதபுரம், போத்தனூர், சுகுணாபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும், பேரூர், பி.கே.புதூர், தொண்டாமுத்தூர், க.க.சாவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்தது. நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக நகரில் குளிர்ந்த காற்று வீசியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.