வால்பாறை அருகே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை விஷக் குளவி கொட்டியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் லோயர் டிவிஷனில் தேயிலை பறிக்கும் பணியில் சுமார் 8 தொழிலாளர்கள் புதன்கிழமை மதியம் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த குளவிகள், பணியில் இருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது.
இதில் காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக உருளிக்கல் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் உடலில் வீக்கம் அதிகமாக காணப்பட்ட சுந்தர்ராஜ் (55), நடராஜ் (62), பழனியம்மாள் (48) ஆகியோர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.