யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களிலும் 58 வட்டங்கள் உருவாக்கப்பட்டு, 58 குழுக்கள் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன.
ஒரு வட்டத்துக்கு சராசரியாக 500 ஹெக்டேர் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு குழுவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வட்டத்தில் புதன்கிழமை பரவலாகச் சென்று யானைகளை நேரில் பார்க்கும் முறையும், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நேர்கோட்டுப் பாதையில் 1 கி.மீ. தொலைவுக்கு ஒவ்வொரு 50 மீட்டர் தூரத்திலும் உள்ள யானைகளின் கழிவுகளை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட மரக்கிடங்கு வளாகம் அருகே உள்ள வனப் பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதில், வனச் சரகர் நசீர் உள்ளிட்ட வனத் துறையினரும், இயற்கை ஆர்வலர்களும் பங்கேற்றனர். 3 குழுக்களாக பிரிந்து, வனப் பகுதிக்குள் சென்று யானைகள் குறித்த கணக்கெடுப்பை அவர்கள் மேற்கொண்டனர்.
சிறுமுகை:
கோத்தகிரி சாலையை அடுத்த சிறுமுகை வனச் சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வனச் சரகர் மனோகரன் தலைமையில், வனவர் ராதாகிருஷ்ணன், வனக் காப்பாளர்கள் ஜித்தன், தங்கராஜ், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், தன்னார்வலர்கள் இக்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com