கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் 3-ஆவது வளாகம் பெரியநாயக்கன்பாளையத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கோவை காருண்யா நகரில் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகத்துக்கு அவிநாசி சாலையில் சிட்டி கேம்பஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்றாவது வளாகம் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம், மத்தம்பாளையத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், அறக்கட்டளை அறங்காவலர்கள் ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், தலைமைச் செயல் அலுவலர் சேவியர், ஜெயகுமார் டேனியல், பதிவாளர் ஜோசப் கென்னடி, துணைவேந்தர் சுந்தர் மனோகரன், டேவிட் பிரகாசம் மற்றும் சமுதாயப் பெரியயோர்கள் பங்கேற்றுப் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தனர். இங்கு கலை, அறிவியல், மனிதநேயம், சட்டம், துணை மருத்துவப் படிப்புகளும், தொழில்முறை கணக்கியல், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி, உதகை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏதுவாக இந்தப் புதிய மையம் செயல்படும் என்று பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.