சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னை தொடர்பாக வால்பாறை தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்த இருந்த போராட்டம் முத்தரப்பு பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது பகுதியில் சாலை வசதி, மருத்துவமனை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
மேலும், தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் பிடித்தம் செய்த அவர்களது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்காமல் இருந்து வருகிறது. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27-ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், வால்பாறையில் மே 26-ஆம் தேதி கோடைவிழா நடைபெறவுள்ளதால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின் பேரில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, தொழிலாளர் தரப்பில் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.