தேயிலைத் தொழிற்சாலையில் தீ விபத்து

வால்பாறை அருகே தேயிலைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின.
Published on
Updated on
1 min read

வால்பாறை அருகே தேயிலைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின.
வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட்  தொழிற்சாலையில்  இலைகளை கருக வைக்க  பெரிய அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடுப்புகள் தொழிற்சாலையின் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையில் புதன்கிழமை காலை 6 மணிக்குத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.  காற்று காரணமாக அடுப்பு பகுதியில் இருந்து பறந்த சென்ற தீப்பொறி  மரத்தூள் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில்  ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேயிலைத் தூள்,  பொருள்கள்
சேதமாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com