ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பொள்ளாச்சி நீதித் துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர், 2003-இல் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தினேஷ் (38) என்பவர் ராமசாமிக்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது, தினேஷ் தனக்கு ரயில்வே நிர்வாகத்தில் உள்ளவர்களுடன் நல்ல தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மூலம் வேலை வாங்கிவிடலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, பல தவணைகளாக ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்தை ராமசாமியிடம் இருந்து தினேஷ் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ரயில்வேயில் வேலை கிடைத்ததற்கான பெயர் பட்டியலை தினேஷ் வழங்கியுள்ளார். அந்தப் பட்டியலின்படி ரமேஷ் ரயில்வே நிர்வாகத்தை அனுகியபோது, அதுபோலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு
பொள்ளாச்சி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதில், தினேஷுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்ற நடுவர் பச்சியப்பன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.