Enable Javscript for better performance
இ.மு. நிர்வாகி கொலை வழக்கு: கைதான இளைஞர் மீண்டும் சிறையிலடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இ.மு. நிர்வாகி கொலை வழக்கு: கைதான இளைஞர் மீண்டும் சிறையிலடைப்பு

    By DIN  |   Published on : 01st April 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சையது அபுதாஹீரை ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
     கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் (37) கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
     இவ்வழக்கில், கோவை, சாய்பாபா காலனி, கருணாநிதி நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹீரை (29) சிபிசிஐடி போலீஸார் சில நாள்களுக்கு முன் கைது செய்தனர்.
     அவரிடம் மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு மார்ச் 28-ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. போலீஸ் காவல் நிறைவடைந்து, கோவை தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் அபுதாஹீர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
     அப்போது, அவரை ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) உத்தரவிட்டார். அதன்படி, அவர் கோவை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai