Enable Javscript for better performance
கேரளம் சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி வழியாக கேரளத்துக்குச் சென்ற லாரிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 30-ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு சில லாரிகள் தவிர பெரும்பாலான லாரிகள் இயங்கி வருகின்றன.
    இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக கேரளத்துக்குச் சென்ற லாரிகளை நல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை சிலர் தடுத்தி நிறுத்தினர். இதனால், கேரளத்துக்குச் செல்லவிருந்த 75-க்கும் மேற்பட்ட லாரிகள் அப்பகுதியில் சிறிது நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.
    இதுகுறித்து தகவலறிந்த பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் அங்கு வந்தவுடன், லாரிகளைத் தடுத்த நிறுத்தியவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பின், லாரிகளை காவல் துறையினர் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai