Enable Javscript for better performance
கைவிடப்பட்ட சின்னத்தடாகம் பேருந்து நிழற்குடைப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    கைவிடப்பட்ட சின்னத்தடாகம் பேருந்து நிழற்குடைப் பணிகள்

    By DIN  |   Published on : 01st April 2017 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துடியலூர் அருகே உள்ள சின்னத்தடாகத்தில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிழற்குடை கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
    சின்னத்தடாகத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பேருந்து நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
    இந்நிலையில், அதன் ஒப்பந்ததாரர் கடந்த பல மாதங்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதானல் நிழற்குடையைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    இதுகுறித்து, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தடாகம் ஆனந்தன் கூறியதாவது:
    சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் இப்பணிகளை செய்து வந்தார். ஆனால், கடந்த பல மாதங்களாக இந்தப் பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai