Enable Javscript for better performance
கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 01st April 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புது தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த இரண்டு நாள்களாக, ரேஸ்கோர்ஸ், டவுன்ஹால் ஆகிய பகுதிகளில், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இந்நிலையில், 3-ஆவது நாளாக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு காய்கறிகள், பழங்களுடன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai