Enable Javscript for better performance
கோவை மாணவி தர்ஷினிக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    கோவை யுகபாரதி பள்ளி மாணவியும், ஸ்கேட்டிங் விளையாட்டில் சாம்பியனுமான தர்ஷினிக்கு (8) பிரைடு ஆஃப் தமிழ்நாடு விருது வழங்கப்பட்டுள்ளது.
     தமிழகத்தில் விவசாயம், கலை, கலாசாரம், பொழுது போக்கு, விளையாட்டு, இதழியல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில் தமிழகத்தின் "பிரைடு 2017' எனும் விருது வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
      இதில், குவாட்டர் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டியில் கோவை, யுகபாரதி பள்ளி மாணவி தர்ஷினி 10.5 கிலோ மீட்டர் தூரத்தை 41.03 நிமிடத்தில் கடந்து இந்திய சாதனைப் புத்தகத்திலும், ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
     மேலும், மாவட்ட, மாநில அளவிலும், தென் மண்டல அளவிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். இதில், சிறிய வயதில் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனை படைத்ததற்காக பிரைடு ஆஃப் தமிழ்நாடு விருது தர்ஷினிக்கு வழங்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai