Enable Javscript for better performance
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக காரமடையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக காரமடையில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 01st April 2017 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காரமடையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காரமடை கார் நிறுத்த மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தார். குன்னத்தூர் பாலு, பெரியநாயக்கன்பாளையம் கண்ணன், சிறுமுகை வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் வேணுகோபால் வரவேற்றார். இதில் விவசாயிகள் சார்பில் கோவை மாவட்டப் பொறுப்பாளர் தண்டபாணி, மேட்டுப்பாளையம் மீனாஹரி ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கணேசன், செங்காளிபாளையம் நடராஜ், புத்தூர் கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில், சூலூர், காரமடை, சிறுமுகை, சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
    இதில், திமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் அருண்குமார்,
    கட்சிப் பிரமுகர்கள் டி.ஆர் சண்முகசுந்தரம், எஸ்எம்டி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai