Enable Javscript for better performance
தொண்டாமுத்தூரில் திமுகவினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறையினர் பொய் வழக்குப் போட முயற்சிப்பதாகக் கூறி திமுகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சிறுவாணி குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என கூறி தொண்டாமுத்தூரில் வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இது தொடர்பாக காவல் துறையினர் 20 பேரை கைது செய்தனர். அவர்களில் நாட்டாமை (எ) சோமசுந்தரம் (48), சங்கர் (47) ஆகிய இருவரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    இந்நிலையில், திமுக முன்னாள் கவுன்சிலர் வைரம் செந்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து, காவல் துறையினர் பொய் வழக்குப் போட முயற்சிப்பதாகக் கூறி திமுக ஒன்றியச் செயலாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு நரசீபுரம் செல்லும் சாலையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai