Enable Javscript for better performance
பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாக விவசாயிகள் தண்ணீர் எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் எச்சரித்துள்ளர்.
     இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
     தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் தற்போது கடும் வறட்சியும், குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதேபோல, கோவை மாவட்டத்தில் கடுமையான வறட்சியும், குடிநீர்ப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. மேலும், அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது.
     எனவே, குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு, பவானி ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாகத் தண்ணீர் எடுத்து வரும் விவசாயிகள் இனிவரும் காலங்களில் தண்ணீர் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
     இந்த அறிவிப்பை மீறி, அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் மின் மோட்டார் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படும். மேலும், பாதை வரி அனுமதி ரத்து செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
     எனவே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் தண்ணீர் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai