Enable Javscript for better performance
பாஜக தேசியச் செயலாளரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக தேசியச் செயலாளரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 01st April 2017 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை வகித்தார்.
    இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக்குறைவாகப் பேசிய பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் மயூரா ஜெயகுமார், புறநகர் மாவட்டத் தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி எம்.பைசல் ரஹ்மான், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளார்.
    அந்த மனு விவரம்:  பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அண்மையில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் குறித்து மிகவும் இழிவாக, நிறவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும், அண்மைக் காலமாக எச்.ராஜா தெரிவிக்கும் கருத்துகள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai