Enable Javscript for better performance
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன.
    தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கின. கோவை மாவட்டத்தில் 346 பள்ளிகளைச் சேர்ந்த 38,218 பேரும், தனித் தேர்வர்கள் 1,762 பேரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்காக 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    இந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் எளிதான வினாக்களை கொண்டிருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கடைசி நாளில் நடைபெற்ற உயிரியல் தேர்வில், விலங்கியல் பிரிவில் இடம் பெற்றிருந்த 3 மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக கோவை சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளித் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல், இறுதி நாளான வெள்ளிக்கிழமை வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் போன்ற தேர்வுகள் நடைபெற்றன. தேர்வுகள் நிறைவடைந்ததையடுத்து தேர்வு மையங்களுக்கு வெளியே மாணவர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai