Enable Javscript for better performance
பெண் காவலர்களுக்கு தொல்லை: நகைப்பட்டறைத் தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    பெண் காவலர்களுக்கு தொல்லை: நகைப்பட்டறைத் தொழிலாளி கைது

    By DIN  |   Published on : 01st April 2017 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு தொலைபேசி மூலமாகத் தொல்லை கொடுத்த நகைப்பட்டறைத் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
     இதுகுறித்து, கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி:
     கோவை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சிலர் தொலைபேசி மூலமாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண் காவலர்களுக்கு அநாகரீகமான முறையில் தொலைபேசி தொல்லை கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்தது. அதன்மீது உரிய விசாரணை நடத்தும்படி காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
     விசாரணையில், செல்வபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்த நகைப்பட்டறைத் தொழிலாளி எஸ்.சுப்பிரமணி (26) மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 20 முறை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பெண் காவலர்களிடம் அநாகரீகமாகப் பேசியிருப்பது தெரியவந்தது.
     இதையடுத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாகத் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai