Enable Javscript for better performance
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 01st April 2017 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
     தொடர்ந்து, நாள்தோறும் அதிகாலை யாக சாலை பூஜைகளும், இரவு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஏப்ரல் 5-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.    
     விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வானது ஏப்ரல் 6-ஆம் தேதி பிற்பகல் 3.15-க்கு நடைபெறுகிறது. ஏப்ரல் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழாவும், 9-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கொடியிறக்குதலுடனும் திருவிழா நிறைவடைகிறது.
     இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் உதவி ஆணையர் என்.சரவணன், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai