Enable Javscript for better performance
மருதமலை அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    மருதமலை அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
    கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு அருகில் மருதமலை செல்லும் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இங்குள்ள மின் அறையில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்துள்ளது.
    இந்தத் தீ மளமளவென அந்த அறையில் இருந்த தொலைத்தொடர்பு சாதனங்களுக்கும் பரவ ஆரம்பித்தன.
    இதுகுறித்து தகவறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். அவர்களது துரித செயல்பாடு காரணமாக பெரும் பொருள்சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒயர்கள் மட்டும் எரிந்து சேதமடைந்தன.
    மேலும், இந்த விபத்து காரணமாக மருதமலையிலிருந்து வடவள்ளி வரையிலான பகுதிகளில் உள்ள தொலைபேசி சேவை மற்றும் 242 எனும் இலக்கத்தில் தொடங்கும் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்கு வந்த பி.எஸ்.என்.எல். முதன்மைப் பொது மேலாளர் பொற்பாத சேகரன், துணைப் பொது மேலாளர்கள் ஆறுமுகம், வெங்கிடுசாமி மற்றும் உதவி மேலாளர்கள் தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்தனர்.
    பின்னர், மறுசீரமைப்புப் பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டு இருப்பதாகவும், மிக விரைவில் தொலைபேசி சேவைகள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai