Enable Javscript for better performance
லாரிகள் வேலைநிறுத்தம்: தேயிலைத் தூள் தேக்கம்- Dinamani

சுடச்சுட

    

    லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலியாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் தேயிலை தூள்கள் தேக்கமடைந்துள்ளன.
    வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள்கள் தினமும் கோவை, குன்னூர், கேரள மாநிலம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏல மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
    தினந்தோறும் பல ஆயிரம் கிலோ தேயிலைத் தூள்கள் லாரிகள் மூலமாகக் கொண்டு செல்லப்படும் நிலையில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் வியாழக்கிழமை இரவு உற்பத்தி செய்யபப்ட்ட பல ஆயிரம் கிலோ தேயிலைத் தூள்கள் தொழிற்சாலைகளிலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    ஆனால், தற்போது தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் குறைவாக இருப்பதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று தொழிற்சாலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai