Enable Javscript for better performance
10 ரூபாய் நாணயங்களைப் பெற மறுக்கும் வங்கி மீது நடவடிக்கை கோரி புகார்- Dinamani

சுடச்சுட

    

    10 ரூபாய் நாணயங்களைப் பெற மறுக்கும் வங்கி மீது நடவடிக்கை கோரி புகார்

    By DIN  |   Published on : 01st April 2017 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை மீது பாஜக நிர்வாகி வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
    இதுகுறித்து, பாஜக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் லோட்டஸ் மணிகண்டன் மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனு:
    தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அலுவலகம் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி ஊழியர்கள் வாங்க மறுக்கின்றனர்.
     இதுகுறித்து, ரிசர்வ் வங்கி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில், அனைத்து வங்கியிலும் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     ஆனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்க மறுப்பதுடன், அவர்களை மரியாதை இன்றி தரக்குறைவாகம் பேசி வருகின்றனர்.
     எனவே, வங்கி அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அதன்மீது உரிய விசாரணை நடத்துமாறு உதவி ஆணையருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai