Enable Javscript for better performance
இளைஞர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் மு.வ.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இதில், தமிழகம் முழுவதிலும் வறட்சி காரணமாக 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
    இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர்கள் பேசுவது கண்டிக்கத்தக்கதாகும் என்றனர். இதில், மாவட்டச் செயலாளர் வே.வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai