Enable Javscript for better performance
சில்லறை வணிகம் குறித்து ஏப்ரல் 6-இல் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    சில்லறை வணிகத்தில் வெற்றி பெறுவது குறித்து வழிகாட்டும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கு, கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்லூரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
     கொங்கு மண்டலத்தில் உள்ள வர்த்தகர்கள், வணிகர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கை, இந்திய சில்லறை விற்பனையாளர் சங்கம், பி.எஸ்.ஜி., புதிய கொங்கு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
     ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவன கருத்தரங்கக் கூடத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், தொழிலதிபர்கள் கே.ஆர்.பிரேம்நாத், சௌந்திரராஜன், டி.கே.சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். மேலும், கல்வி நிறுவன இயக்குநர் ஆர்.நந்தகோபால், பேராசிரியர் உமேஷ், சில்லறை வணிகத்தில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் பலரும் உரையாற்றுகின்றனர்.
     இதைத் தொடர்ந்து குழு விவாதமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai