Enable Javscript for better performance
சூலூரில் கடைகளில் ரூ. 81 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சூலூரில் இயங்கி வரும் மூன்று கடைகளில் ரூ. 81 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    சூலூர் பேருந்து நிலையம் அருகே மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் இரண்டு கடைகளும், அதன் அருகே ஒரு ஜவுளிக் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் வழக்கம்போல், சனிக்கிழமை இரவு கடைகளைப் பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பார்த்தபோது, அக்கடைகளின் ஷட்டர் திறக்கப்பட்டு ரூ. 81 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai