Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது

    By DIN  |   Published on : 03rd April 2017 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளி சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக வேன் ஓட்டுநரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுமிக்கு வாய் பேசவும், காது கேட்கவும் செய்யாது. இந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள பயிற்சிப் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டுக்குத் திரும்பிய அச்சிறுமி அழுது கொண்டிருந்தார். அதுகுறித்து விசாரித்தபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இதுகுறித்து, கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    இப்புகாரின் பேரில், பள்ளியின் வேன் ஓட்டுநரான வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த பாலன் (48) என்பவரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai