Enable Javscript for better performance
முகநூலில் பெண்ணுக்குத் தொல்லை: இளைஞர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    திருமணம் செய்து கொள்ளுமாறு முகநூலில் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர் மீது போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை, போத்தனூர் சாலை, திருமலை நகரைச் சேர்ந்த 25 வயது பெண், போத்தனூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், தனக்குத் திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று பெற்றோருடன் வசித்து வருகிறேன்.
    இந்நிலையில், சவூதி அரேபியாவில் பணிபுரியும் எனது உறவினர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த சில மாதங்களாக முகநூலில் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும், எனது புகைப்படத்தை முகமாற்றம் செய்து ஆபாசமாக முகநூலில் அனுப்பியுள்ளார்.
    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின்பேரில், கரும்புக்கடையச் சேர்ந்த தவ்பிக் (25) என்ற இளைஞர் மீது போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai