Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 கோடி கட்டட நிதி வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 கோடி கட்டட நிதி வழங்கல்

    By DIN  |   Published on : 03rd April 2017 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட மேட்டுப்பாளையம் என்.சி.ஆரோமேடிக்ஸ் நிறுவனம், பி.பி. நஞ்சையா-லிங்கம்மாள் தர்ம அறக்கட்டளை, நகர அரிமா சங்க அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு அரிமா சங்க அறக்கட்டளை ஆகிய சார்பில் ரூ. 1 கோடி கட்டட நிதி வழங்கப்படுகிறது.
    இதில், என்.சி.ஆரோமேடிக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 20 லட்சம், நஞ்சையா-லிங்கம்மாள் தர்ம அறக்கட்டளை சார்பில் ரூ. 20 லட்சம், அரிமா சங்க அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு அரிமா அறக்கட்டளை சார்பில் ரூ. 60 லட்சம் வழங்கப்படுகிறது. மகாஜன பள்ளிகள் சார்பில் இந்த நிதி ஏற்பு விழா மற்றும் பாராட்டு விழா, நஞ்சையா-லிங்கம்மாள் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
    விழாவுக்கு மகாஜன பள்ளிக் குழு துணைத் தலைவர் வி.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளைத் தலைவர் பி.என்.ராஜேந்திரன், முன்னாள் ஆளுநர் வின்சென்ட் வேதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், நன்கொடையாளர்கள் பி.என்.ராஜேந்திரன் (அரிமா அறக்கட்டளை), நஞ்சராஜ் சாந்தப்பா, முரளிபாபு (என்.சி.ஆரோமேடிக்ஸ்), மல்லிகா முரளிபாபு (நஞ்சையா -லிங்கம்மாள் அறக்கட்டளை) சார்பில் வழங்கப்பட்ட நிதியை பள்ளிச் செயலர் என்.கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டார். அரிமா மாவட்ட ஆளுநர் விஜயகுமார், முன்னாள் ஆளுநர் நவரத்தன்மல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    இந்நிகழ்ச்சியில், அரிமா சங்க நிர்வாகிகள் பரமசிவம், சுப்பையன், மருத்துவர்கள் இஸ்மா யில், சுதாகர், ரோட்டரி செயலர் சரவணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், சத்யசேவா கமிட்டி உறுப்பினர்களும், பெற்றோர்களும், ஆசிரிய - ஆசிரியைகளும் திரளாகக் கலந்துகொண்டனர். பள்ளி இணைச் செயலர் எச்.எல்.நாகராஜ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai