Enable Javscript for better performance
வால்பாறையில் தமாகாவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 500 வழங்க வலியுறுத்தி வால்பாறையில் தமாகாவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வால்பாறை காந்தி சிலை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா தொழிற்சங்கத் தலைவர் இளவரி தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவை தங்கம் கலந்து கொண்டு பேசியதாவது:
    தோட்டத் தொழிலாளர்களுக்கான தினக் கூலியை உயர்த்தி வழங்க எஸ்டேட் நிர்வாகம் மறுத்து வருகிறது. விரைவில், தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 500 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில், இளைஞர் அணித் தலைவர் யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் விடியல் சேகர், குனியமுத்தூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai