Enable Javscript for better performance
விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தம் தொடக்கம்: நாளொன்றுக்கு ரூ. 22 கோடி இழப்பு- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தம் தொடக்கம்: நாளொன்றுக்கு ரூ. 22 கோடி இழப்பு

    By DIN  |   Published on : 03rd April 2017 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ரூ. 22 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
    சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்கள் கூட்டம் கடந்த 26-ஆம் தேதி  நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது.
    இதில், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு இடையே கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், தொழிலாளர் நலத் துறையினர் முன்னிலையில் 2014-இல் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், குறிப்பிட்டுள்ளபடி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்திக் கொடுக்காமல் பிடித்தம் செய்து வருகின்றனர். அவ்வாறு, இதுவரையிலும் பிடித்தம் செய்யப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    இந்தப் போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் 76 கிளைகளில் உள்ள 75,000 விசைத்தறிகளும், திருப்பூர் மாவட்டத்தில் 37 கிளைகளில் உள்ள 50,000 விசைத்தறிகளும் இயங்காது. இதனால், மொத்தமாக ஒரு நாளைக்கு ரூ. 22 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும்.
    பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai