Enable Javscript for better performance
ஆட்டிஸம் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கவுண்டம்பாளையத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்தில் செயல்படும் மாற்றுத் திறன்  குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையத்தில் உலக ஆட்டிஸம் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
    ஆட்டிஸம் எனப்படும் புறஉலகு சிந்தனையற்ற தன்மையினால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 2-இல் உலகம் முழுவதும் இத்தின விழா நடத்தப்படுகிறது.
    அதன்படி, கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் தா.பிளாரன்ஸ் முன்னிலை வகித்தார். பெ.நா.பாளையம் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்புக் கல்வி ஆசிரியர் ஆர்த்தி, இத்தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்வரி ஆகியோர் பேசினர். இதில் பங்கேற்ற அனைவரும் உலக ஆட்டிஸம் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai