Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை அவிநாசி சாலையில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற பெண் தவறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    திருப்பூர், மும்மூர்த்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி கலாமணி (40). இவர் தனது மகன் மோகன்ராஜுடன் இருசக்கர வாகனத்தில் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். இவர், அவிநாசி சாலை ஜி.கே.ஆர். நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.
    விபத்தில் இளைஞர் சாவு... திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (19). இவர் கோவை, தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
    இந்த நிலையில், இவர் அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் உள்ள  குப்பைத் தொட்டியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இந்த இரு விபத்துகள் குறித்து கோவை மாநகர போக்குவரத்துப் புலனாய்வு (கிழக்கு) பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai