Enable Javscript for better performance
தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை, பேரூர் அருகே ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
     இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
     கோவை, உக்கடம் பகுதியில் மனநலம் சரியில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த இஸ்மாயில் (65) என்பவரை சிலர் மீட்டு, பேரூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சில நாள்களுக்கு முன்னர் சேர்த்தனர். இந்நிலையில், அந்த இல்லத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டியில்  இஸ்மாயில் சடலமாக மீட்கப்பட்டார். பேரூர் காவல் துறையினர், இஸ்மாயிலின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, இஸ்மாயில் எதிர்பாராதவிதமாக தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai