Enable Javscript for better performance
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: முதல்வருக்கு ஏஐடியூசி கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: முதல்வருக்கு ஏஐடியூசி கோரிக்கை

    By DIN  |   Published on : 04th April 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மா.ஆறுமுகம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.236 வீதம் தினக் கூலி வழங்கப்படுகிறது. மலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான மழை, காற்று போன்ற சூழலிலும், கொடிய வன விலங்குகளுக்கு மத்தியிலும் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெறும் தினக் கூலி என்பது குடும்பத்தை பாதுகாக்கவும், குழந்தைகளைப் படிக்க வைக்கவும் போதுமானதாக இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு, அதன் நிர்வாகங்கள் தினக் கூலியாக ரூ. 450 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai