Enable Javscript for better performance
மதுக் கடையை மூடக் கோரி பொது மக்கள் சாலை மறியல்: போலீஸ் தடியடி- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடையை மூடக் கோரி பொது மக்கள் சாலை மறியல்: போலீஸ் தடியடி

    By DIN  |   Published on : 04th April 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி திங்கள்கிழமை கலைத்தனர்.
     செஞ்சேரிமலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி பொது மக்கள் நீண்டகாலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    இந்நிலையில், இந்த டாஸ்மாக் மதுக் கடையின் மதுபானக் கூடத்துக்கு திங்கள்கிழமை மது அருந்தச் சென்றவர்களிடம் கூடுதல் விலை கேட்டதாகவும், அதனால்,  அவர்களுக்கும், அங்குள்ள பணியளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும்  கூறப்படுகிறது.
     இதையடுத்து ஊர் மக்கள், மதுக் கடையை உடனே மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தை காவல் உதவி ஆய்வாளர் முத்துகுமார் கலைக்க முயன்றுள்ளார். அப்போது, பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, காவல் ஆய்வாளார் ஜெயசந்திரன் தலைமையில் அங்கு சென்ற போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொது மக்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
    டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு... நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மதுக்கரைப் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் சனிக்கிழமை முதல் மூடப்பட்டன.
     இந்நிலையில், எட்டிமடை பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அங்கிருந்து காளியாபுரம் பிரிவு அருகே இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, காளியாபுரம், திருமலையம்பாளையம், ரொட்டிகவுண்டனூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதிய டாஸ்மாக் கடைக் கட்டடத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். அவர்களிடம், க.க.சாவடி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதிக்கு டாஸ்மாக் மதுக் கடை வராது என உறுதி அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டனர். அதையடுத்து, தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கோவை மாவட்ட மேலாளர் பாலாஜி, தொலைப்பேசி மூலம் அவர்களிடம் இது தொடர்பான உறுதிமொழி அளித்தார். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai