Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலியை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
     ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவியியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான  அதிநவீன சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர். இத்துறைகளின் தலைவர்களான சீனிவாசன், செந்தமிழ்ச்செல்வி ஆகியோரது வழிகாட்டுதல்களின் பேரில் இறுதியாண்டு மாணவ, மாணவிகளான ராம்குமார், நாகார்ஜுனன், ராஜநந்தினி, இளவரசி, அனு ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலியை வடிவமைத்தனர்.
     இந்த சக்கர நாற்காலியை மாற்றுத் திறனாளிகள் படுக்கையைப்போல மடித்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக் உதவியுடன் மருத்துவமனைக்குள் யாருடைய உதவியுமின்றி இடம் பெயர்ந்து செல்ல முடியும். மேலும், இதில் உள்ள ஜிபிஆர்எஸ் கருவி மூலமாக இதைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளையும் தொடர்ந்து கண்காணித்துப் பாதுகாக்க முடியும். இந்த சக்கர நாற்காலிகளை வடிவமைத்த மாணவர்களை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார், கல்வித் துறை இயக்குநர் எபிநேசர் ஜெயகுமார், முதல்வர் என்.ஆர்.அலமேலு, ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் ராம்குமார் ஆகியோர் பாராட்டினர். இந்த சக்கர நாற்காலியை சாய்பாபா காலனியில் உள்ள அம்ரீத் சேவை மையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்நிகழச்சியில், பேராசிரியர்கள் ஷர்மிளா, சிவசங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai