Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் நகராட்சி: புதிய அலுவலகம் செயல்படத் தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் நகராட்சி: புதிய அலுவலகம் செயல்படத் தொடங்கியது

    By DIN  |   Published on : 04th April 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
    கடந்த 1948-இல் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் பாக்குகார வீதியில் செயல்பட்டு வந்தது. 1992-இல் தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, சுப்பிரமணியர் கோயில் அருகே நகராட்சி அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
    இந்நிலையில், பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு ஏற்ப காரமடை சாலையில்  உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணிகள் 2011-இல் தொடங்கப்பட்டன. இப்பணிகள் 2016-இல் நிறைவுபெற்று, திறப்பு விழா செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக புதிய அலுவலகத்துக்கு இடம் மாறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சி அலுவலகம், புதிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai