Enable Javscript for better performance
ரயில் மோதி இளைஞரின் கால்கள் முறிந்தன- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இளைஞரின் இரு கால்களும் முறிந்தன.
    கோவை, உக்கடம் மஜீத் காலனியில் வசித்து வரும் சின்னசாமி என்பவரின் மகன் சிவகுமார் (24). இவர், இயற்கை உபாதகையைக் கழிப்பதற்காக ரயில் நிலையம் அருகே உள்ள பாலத்துக்கு அடியில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சென்றார். அவர், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவரது இருகால்களும் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.
    இந்த நிலையில், அந்த வழியாக கேரளம் செல்லும் விரைவு ரயில் சிவகுமாரின் மீது மோதியதில், அவரது இருகால்களும் முறிந்தன.  சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai