Enable Javscript for better performance
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை செல்வபுரம் அருகே அழுகிய நிலையில் சாக்கடையில் கிடந்த ஆண் சடலத்தை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை செல்வபுரத்தை அடுத்த தெலுங்குபாளையம் பிரிவு, ராஜீவ் காந்தி நகரில் உள்ள சாக்கடையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர்.
    பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக அந்தச் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai