Enable Javscript for better performance
இளம் வயதில் மகப்பேறு: பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை அரசு மருத்துவமனையில் இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் ரத்தப் போக்கு அதிகமானதால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள கிச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி கௌசல்யா (19). இவருக்கு கடந்த 21 நாள்களுக்கு முன்பு, கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பிறகு கௌசல்யாவுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு இருந்து வந்தது.
    மேலும், அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருந்தது. இந்நிலையில், கௌசல்யா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தரவேல் கூறியதாவது:
    பொதுவாக இளம் வயதில் மணம் முடிக்கும் பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதில், குழந்தை பிறப்புக்கு பிறகு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை இளம் வயதில் திருமணம் செய்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai