ஏப்ரல் 11 முதல் கால்நடை வளர்ப்பு பயிற்சி
By DIN | Published on : 05th April 2017 07:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கால்நடை வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 11, 12-ஆம் தேதிகளில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, 18, 19-ஆம் தேதிகளில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று பயிற்சி மையத் தலைவரும், இணைப் பேராசிரியருமான கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையத்தை நேரிலோ, 0422}2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.