Enable Javscript for better performance
காவல் ஆய்வாளர் மீதுநடவடிக்கை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியைச் சேர்ந்த 440 பேரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
    பாஜக இளைஞரணி நிர்வாகி ஆனந்தை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் அவரது கால்களை உடைத்துள்ளார். மேலும், அவர் மீது பொய் வழக்குப் போட்டதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனந்தைப் பார்க்கச் சென்ற, அவரது தாயையும் ஜாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியுள்ளார். இதனால், மனமுடைந்து அவரது தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு காரணமான ஆய்வாளர் ராஜ்குமார் மீது உரிய நீதி விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    இந்நிலையில், கோவை ராஜ வீதி தேர்நிலைத் திடல், ஒலம்பஸ், செல்வபுரம் சந்திப்பு, சுந்தராபுரம், பி.என்.புதூர், பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி மைதானம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், கணபதி, பி.என்.புதூர் உள்ளிட்ட 9 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியைச் சேர்ந்த 58 பெண்கள் உள்ளிட்ட 440 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai