Enable Javscript for better performance
சாணி பவுடர் குடித்த தம்பதி:கணவர் சாவு, மனைவிக்கு சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    சாணி பவுடர் குடித்த தம்பதி: கணவர் சாவு, மனைவிக்கு சிகிச்சை

    By DIN  |   Published on : 05th April 2017 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே குடும்பத் தகராறு காரணமாக தம்பதி சாணி பவுடரை குடித்தனர். இதில், கணவர் உயிரிழந்தார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    ஆலாந்துறையை அடுத்த முகாசிமங்கலத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (45). இவரது மனைவி வள்ளியம்மாள் (40). கூலித் தொழிலாளியான கனகராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இத்தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கனகராஜ் திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் வள்ளியம்மாள் சாணி பவுடரை குடித்துள்ளார். அதை கனகராஜும் வாங்கிக் குடித்துள்ளார்.
    இதில், மயக்கமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கனகராஜ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வள்ளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai