Enable Javscript for better performance
சூலூர் அருகே குளத்தில்செத்து மிதந்த மீன்கள்- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் அருகே குளத்தூரில் உள்ள ஆச்சான் குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்தன.
    சூலூர் வட்டத்தில் உள்ள குளத்தூரில் ஆச்சான் குளம் உள்ளது. இக்குளம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில், தற்போது சுமார் 150 ஏக்கர் பரப்புக்குத் தண்ணீர் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து நொய்யல் ஆற்றில் மழைக் காலங்களில் வரும் மழை நீர் இங்கு சேமித்து வைக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். ஆச்சான் குளத்தில் தற்போது மீன் வளர்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இக்குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செவ்வாய்க்கிழமை செத்து மிதந்தன.
    கடும் வெயில் காரணமாக குளத்து நீர் சூடானதால் மின்கள் இறந்தனவா அல்லது கழிவு நீரில் ஏதாவது குளத்து நீரில் கலந்ததால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் அனைத்தும் இறந்ததால், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai