Enable Javscript for better performance
டி.ஜே. கல்லூரியின் முன்னாள் மாணவருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    போர்ப்ஸ் பத்திரிகையின் விருது பெற்ற டி.ஜே.கல்லூரியின் முன்னாள் மாணவருக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
    சென்னையைச் சேர்ந்தவர் சிவநல்லபெருமாள். இவர், டி.ஜே.கல்லூரியில் 2013-இல் இளங்கலைப் பட்டம் படித்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகையில் இந்தியாவின் தலைசிறந்த 30 வயதுக்கு உள்பட்டோருக்கான சாதனை புரிந்தவர்களில் வடிவமைப்புக்கான விருதை சிவநல்லபெருமாள் பெற்றுள்ளார்.
    அவருக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. முன்னதாக, ஜி.கே.டி அறக்கட்டளையின் அறங்காவலர் லலிதா தேவி சஞ்சய் ஜெயவர்தனவேலு வரவேற்றார். ஜி.கே.டி. அறக்கட்டளையின் தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு வாழ்த்துரை வழங்கினார். டி.ஜே. அகாதெமி ஆப் டிசைன் கல்லூரியின் தலைவர் பலராம் சிறப்புரையாற்றினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai